Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஷ்யாவை அதிர வைத்த காலா, வசூல் சாதனை

ரஷ்யாவில் இதுவரை ஒரு தமிழ் படம் கூட ரிலிஸானது இல்லை. முதன் முறையாக காலா தான் ரிலிஸாகியுள்ளது.

பலரும் காலா ஹிந்தி பதிப்பை ரிலிஸ் செய்யலாம் என்று சொல்ல, தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ் பதிப்பையே ரிலிஸ் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து ரஷ்யாவில் காலா இரண்டு காட்சிகள் வரை ரிலிஸ் செய்ய, இரண்டுமே ஹவுஸ்புல் ஆகியுள்ளது.

மேலும், தமிழர்கள் மட்டுமின்றி ரஷ்ய மக்கள் சிலரும் படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இதுபோன்ற உணர்வுப்பூர்வமான தமிழ் படங்களை நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம் என கூறியுள்ளனர்.