Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தில் காயத்ரி ரகுராமிற்கு பதிலடி- கவனித்தீர்களா!

காலா சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பில் உள்ளது.

இந்த வாரம் ரம்ஜான் வருவதால் கண்டிப்பாக படத்திற்கு நல்ல கூட்டம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ‘சேரி பிகேவியர்’ என ஒரு வார்த்தையை விடுவார்.

இதற்கு பெரும் கண்டனங்கள் வர, கமலே மன்னிப்பு கேட்டார், அதை தொடர்ந்து காயத்ரி ரகுராமும் வருத்தம் தெரிவித்தார்.

தற்போது வந்துள்ள காலா படத்தில் ரஜினியின் மகனும் இந்த வார்த்தையை கூற, ரஜினி ஓங்கி கன்னத்தில் அறைவார்.

பலரும் இது காயத்ரி ரகுராமிற்கு கொடுத்த பதிலடி தான் என கூறி வருகின்றனர்.