Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரசியல் இல்லையா, ரஜினியின் அடுத்த படம், இயக்குனர் பற்றி வெளியான தகவல்

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பெரிய கேள்விக்கு கடந்த வருடம் பதில் கிடைத்தது. ஆனால் பதில் இன்னும் பதிலாகவே இருக்கிறது, முழுதாக ரஜினி அரசியலில் ஈடுபடவில்லை, இன்னும் நேரம் வரவில்லை என்கிறார்.

அதற்கு பதிலாக அடுத்தடுத்து படங்கள் தேர்வு செய்து வருகிறார். காலா முடிந்த கையோடு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படம் முடிந்ததும் அரசியலில் ஈடுபடுவார் என்று பார்த்தால் வேறொரு செய்தி வந்துள்ளது.

அதாவது அண்மையில் ஏ.ஆர். முருகதாஸ் ரஜினியை சந்தித்து சில கதை கூறியிருப்பதாகவும், அதில் ஒன்றை சூப்பர் ஸ்டார் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.