Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையை அதிர வைத்த காலா முதல் வார வசூல், நம்பர் 1

காலா படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், பல இடங்களில் படத்திற்கு பாசிட்டிவ் டாக் இருந்தும் பெரியளவில் கூட்டம் வரவில்லை என கூறப்படுகின்றது.

ஆனால், சென்னையில் மட்டும் காலா ராஜ்ஜியம் தான், படம் வெளிவந்து ஒரு வார முடிவில் மட்டுமே ரூ 8 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே சென்னையிலேயே முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படங்களில் காலா தான் நம்பர் 1 என கூறப்படுகின்றது.