Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்தில் மொத்தம் எத்தனை சண்டைக்காட்சி, படம் எப்படியிருக்கும்- வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

தல ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது விசுவாசம் படத்தின் அப்டேட்ஸுக்கு தான். ஆனால், சிவா தற்போது வேலை தான் முக்கியம் என்று படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் விசுவாசம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விசுவாசம் படத்தில் மொத்தம் 5 சண்டைக்காட்சிகள்.

அந்த 5 சண்டைக்காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாக இருக்கும், சமீபத்தில் காமெடி கலந்த ஒரு சண்டைக்காட்சியை எடுத்து முடித்தோம்.

அதை தொடர்ந்து 4 சண்டைக்காட்சிகள் எடுக்கவுள்ளோம், மேலும், இப்படம் சிறுத்தை படம் போலவே இருக்கும்.

ஆக்‌ஷன், எமோஷ்னல் என அனைத்து நிறைந்த கமர்ஷியல் படம் தான், அதே நேரத்தில் சண்டைக்காட்சிகள் பறந்து, பறந்து அடிக்காமல் லைவ்வாக இருக்கும்படி தான் எடுக்கவுள்ளோம்’ என கூறியுள்ளார்.