Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா? விரிவான தகவல்கள் உள்ளே

சூர்யா என்றாலே திறமையான நடிகர், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்பவர், படத்திற்காக எந்த அளவிற்கும் தன்னை மாற்றிக்கொள்ள கூடியவர் என்ற அடையாளமே அவரிடம் உள்ளது. அத்தகையவரை வைத்து இயக்கவே பெரும்பாலான இயக்குனர்கள் விரும்புவர்.

அத்தகைய நடிப்பாற்றலை உடைய சூர்யா, செல்வராகவன் இயக்கி வரும் NGK நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் அவர் அடுத்த படத்திற்க்கான வேலையில் இறங்கி விட்டார்.

அடுத்ததாக அவர், K.V.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யா ஏற்கனவே K.V.ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வளர்ந்து வரும் நடிகை சாய்ஷா நடிக்கிறார்.

மேலும் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஹிந்தியில் மிகப்பெரும் ஹிட் பெற்ற 3 இடியட்ஸ் படத்தில் நடித்த பூமன் இரானி, சமுத்திரகனி போன்றோரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இது எல்லாம் தெரிந்த தகவல்களே.

புதிய தகவல் என்னவென்றால், இப்படத்தில் சூர்யா நான்கு வேடங்களில் தோன்ற உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 25ம் தேதி லண்டனில் தொடங்கி, அங்குள்ள கவர்ச்சியான நகரங்களில் நடக்கவுள்ளது.