Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படம் எப்படி இருக்கும், சில தகவலை வெளியிட்ட பிரபலம்- அப்போ மாஸ் தான்

தமிழ் சினிமாவில் எல்லா மாஸ் நடிகர்களின் படங்கள் பற்றிய அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அஜித்தின் விசுவாசம் படத்தின் தகவல்கள் மட்டும் அடிக்கடி வருவது இல்லை.

இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்பட்டார்கள் என்றே கூறலாம். இந்த நேரத்தில் தான் விசுவாசம் படத்தில் விவேக் அவர்கள் இணைந்துள்ளதாக தகவல் வந்தது.

தற்போது விசுவாசம் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்திருக்கும் அனு வர்தன் ஒரு பேட்டியில், விசுவாசம் கண்டிப்பா ஒரு மாஸ் படமாக இருக்கும். வீரம் படம் போல இந்த படமும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும்.

படப்பிடிப்பு தளத்தில் அஜித் அவர்கள் மிகவும் ரசித்து இப்படத்தில் நடிக்கிறார். அஜித்-நயன்தாரா இருவருக்கும் ஒரு நல்ல கதாபாத்திரம் இருக்கும், திரையில் பார்த்தால் புரியும் என்று பேசியுள்ளார்.