Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் அடுத்த படத்திற்காக போட்டிபோடும் இயக்குனர்கள்- அதில் விஜய் இயக்குனரும் உண்டு

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க யார் தான் ஆசைப்பட மாட்டார்கள். இப்போது இளம் இயக்குனர்களான ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

அடுத்து ஏ.ஆர். முருகதாஸ், ரஜினியை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது என்னவென்றால் ரஜினியின் மாஸ் படமான பாட்ஷா படத்தின் 2ம் பாக கதையை மொட்ட சிவா கெட்ட சிவா பட இயக்குனர் சாய் ரமணி எழுதி அதை ரஜினியிடம் கூறியிருக்கிறாராம்.

கதை பிடித்தும் ரஜினி இப்பட 2ம் பாகத்தை எடுக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம். இதனால் சாய் ரமணி வேறொரு கதையை ரஜினிக்காக எழுதி வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.