Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விசுவாசம் படத்தில் ரசிகர்களுக்காக மட்டுமே இருக்கும் ஒரு ஸ்பெஷல் விஷயம்- இதுவரை வெளிவராத தகவல்

அஜித்தின் விசுவாசம் படம் தீபாவளி வருமா இல்லை பொங்கலா என்ற பெரிய குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் படக்குழு எந்தஒரு விவரத்தையும் வெளியிடாமல் படப்பிடிப்பில் படு பிஸியாக உள்ளனர்.

இந்த நேரத்தில் படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கலகலப்பு, காமெடி, ஆக்ஷன் கலந்த தேனிஇ மதுரை பின்னணியில் சாதாரண குடும்பத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக விசுவாசம் படம் அமைந்துள்ளதாம்.

அதோடு படத்தில் அஜித் பிரம்மாண்ட பைக் ஒன்றை பயன்படுத்துகிறாராம். இந்த பைக்கை ரசிகர்கள் கொண்டாடுவது போல் பிரம்மாண்ட பொருட்செலவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். யாரும் பைக்கை பார்த்துவிடக்கூடாது என்று ரகசியமாக படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை அதிக பொருட்செலவில் கிட்டதட்ட ரூ. 5 கோடி செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.