Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா நஷ்டம் இத்தனை கோடியா! இவ்வளவு பணத்தை திருப்பிக்கொடுத்தாரா தனுஷ்? அதிர்ச்சி தகவல்

காலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான் இருந்தது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை என்று கூறப்படுகின்றது, இதனால், தனுஷ் இப்படத்தின் நஷ்ட ஈடாக ரூ 40 கோடியை தருவதாக சம்மதித்துள்ளதாக ஒரு பிரபல தொலைக்காட்சி கூறியுள்ளது.

மேலும், இப்பணத்தை கலைப்புலி தாணு அவர்கள் வாங்கித்தர பொறுப்பேற்றது மட்டுமில்லாமல், அவர் பேனரில் தனுஷ் நடிப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளாராம்.

இதுமட்டுமின்றி வடசென்னை படத்தையும் தனுஷ் காலா வாங்கியவர்களிடமே தருவதாக வாக்கு கொடுத்துள்ளாராம்.