Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா?

விஜய் படங்கள் என்றாலே இப்போதெல்லாம் பிரச்சனைகள் எழும்புகின்றது. கடைசியாக வந்த மெர்சல் படத்திற்கு எப்படியெல்லாம் பிரச்சனைகள் வந்தது என்பதை நாமே பார்த்தோம்.

இப்போது சர்கார் பட வேலைகள் கூட முடியவில்லை அதற்குள் பட சம்பந்தப்பட்டு வந்த ஃபஸ்ட் லுக்கிற்கு பிரச்சனை எழும்பிவிட்டது. சிகரெட் பிடிப்பது போல் வந்த விஜய்யின் லுக் எடுத்தாக வேண்டும் என்று சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர், இதனால் சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய் இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இருந்து சிகரெட் பிடிப்பது போல் இருந்த ஃபஸ்ட் லுக்கை எடுத்துவிட்டனர்.

ஆனால் விஜய் ரசிகர்களோ அதை எப்படி எடுக்க முடியும் என்று கூறி டுவிட்டரில் தங்களது DPயை விஜய் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை வைத்துள்ளனர்.

விஜய்யே வம்பு வேண்டாம் என்று ஃபஸ்ட் லுக்கை எடுத்துவிட்ட போது ரசிகர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று சிலர் கமெண்ட் செய்கின்றனர்.