Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது

தொடர்ந்து ஹரஹர மஹாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து என அடல்ட் படமாக நடித்து வந்தவர், கௌதம் கார்த்திக். இப்படங்கள் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பல பேரிடம் இருந்து கண்டன குரல்களையும் வாங்கியது.

இவ்வளவு ஏன் அடல்ட் படம் என்றாலே அனைவரின் ஞாபகத்துக்கும் வரும் ஹீரோவாக கௌதம் கார்த்திக் மாறியிருந்தார். ஆனால் அந்த நினைப்பை எல்லாம் மாற்றும் விதமாக அமைந்த படம் தான் அவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த மிஸ்டர்.சந்திரமௌலி.

படம் வெற்றியா தோல்வியா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் கௌதம் கார்த்திக்கின் அடல்ட் அடையாளத்தை மாற்றியிருக்கிறது. படத்தில் செண்டிமெண்ட், ஆக்‌ஷன், ரொமன்ஸ் என அனைத்து இடங்களிலும் கௌதம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

மேலும் வசூலும் கணிசமாக அள்ளியுள்ளது என்றே சொல்ல வேண்டும். படம் ரீலிஸான நாளில் இருந்து இதுவரை 4.11 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.