Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்

காலா அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட படங்களில் ஒன்று. இப்படத்திற்கு சில சர்ச்சைகள் எழுந்ததால் பிரச்சனைக்கு நடுவே தான் படம் வெளியானது.

ரஞ்சித் இயக்கிய இப்படம் மும்பை வாழ் தமிழரின் கதையை மையப்படுத்தி வெளியானது. ஆனால் படத்திற்கு நல்ல விமர்சனங்களும் எழுந்தது. இந்நிலையில் படம் நஷ்டத்தை சந்தித்ததாக அண்மையில் தகவல் வெளியானது. இது குறித்து தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இப்படம் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 5 லிஸ்டில் 5 ம் பிடித்துள்ளது.

1) தானா சேர்ந்த கூட்டம்

2) கலகலப்பு 2

3) இன்ஃபினிட்டி வார்

4) இரும்பு திரை

5) காலா