Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் உயரத்தை கலாய்க்க சொன்ன விஜய் ரசிகர்- தமிழ்ப்படம் 2 இயக்குனரின் அதிரடி பதில்

பிரபலங்களை கலாய்ப்பது இப்போது எல்லாம் சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது.

ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் பிரபல பாடல் தொலைக்காட்சியில் சூர்யாவின் உயரத்தை வைத்து பிரபல தொகுப்பாளினிகள் கிண்டல் செய்தது அனைவருக்கும் நினைவிறுக்கும்.

இப்போது சூர்யா ரசிகர்கள் தொலைக்காட்சி முன் சென்று போராட்டம் எல்லாம் செய்தார்கள், பின் அந்த தொகுப்பாளர்கள் மன்னிப்பும் கேட்டார்கள்.

இந்த நேரத்தில் தமிழ்ப்படம் 2 பட இயக்குனர் அமுதன் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு விஜய் ரசிகர், சூர்யாவை கலாய்த்தால் அவரது உயரத்தை வைத்து செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு இயக்குனர் ஒரு போதும் அப்படி செய்ய மாட்டேன் என்று பதில் கொடுத்துள்ளார்.