Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கு செக்- தடையை தகர்க்குமா?

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருக்கும் படம்.

விஜய்யின் கடைசி படமான மெர்சல் ரூ 50 கோடியை முதல் நாளே வசூல் செய்தது, இந்நிலையில் சர்கார் எப்படியும் முதல் நாள் ரூ 65 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், விஜய்யின் சர்காருடன் சூர்யாவின் NGK படமும் வருவதால் கண்டிப்பாக சர்கார் வசூலுக்கு செக் தான் என கூறப்படுகின்றது.

இரண்டு படங்கள் ஒரே நாட்களில் வருவதால், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் சர்காருக்கு வசூல் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதையும் முறியடித்து வசூல் சாதனை செய்யுமா? சர்கார் பொறுத்திருந்து பார்ப்போம்.