Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சர்கார் ரஜினி இந்த பட கதை போல் இருக்குமா- அதுவும் இந்த படமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படம் எப்படியாவது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்திக்கின்றனர். ஆனால் பட ஃபஸ்ட் லுக்கிற்கே பிரச்சனைகள் ஆரம்பம் ஆகிவிட்டது.

இந்த நேரத்தில் சர்கார் படத்தின் கதை இதுதான் என ஒரு கதை சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

ரஜினி நடித்த சிவாஜி படத்தை போல சர்கார் படத்தின் கதையாம். வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை தமிழகம் கொண்டு வந்து சமூகசேவை செய்ய விரும்புவார் ரஜினி.

அதேபோல் சர்கார் படத்தில் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருக்கும் விஜய் அங்கு சம்பாதித்த பணத்தை தன் சொந்த ஊரின் நலனுக்காக செலவிட விரும்புகிறார். ஆனால் அதற்கு ஏற்படும் பிரச்சனைகளை தொடர்ந்து அரசியலில் குதித்து எதிரிகளை அழிக்கிறார்.

அதோடு கூகுளில் வேலை செய்யும் தமிழரான சுந்தர்பிச்சை கதாபாத்திரம் போன்று விஜய்யின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன