Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்ப்படம்-2வில் யாருக்கு அதிக கலாய் தெரியுமா? இதை பாருங்க

தமிழ்ப்படம்-2 ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருந்த படம். இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக இன்று திரைக்கு வர, பெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது.

அதிகாலை 5 மணிக்கெல்லாம் படத்தின் காட்சி தொடங்கியது, இந்நிலையில் தமிழ்ப்படம்-2வில் யாரை அதிகம் கலாய்த்தார்கள் என்று ரசிகர்களுக்குள் சண்டை ஆரம்பித்துவிட்டது.

படம் ஆரம்பமே தேவர்மகன் கமலில் தொடங்கி கிளைமேக்ஸ் தேவர்மகனிலேயே முடிகின்றது, இதற்கு இடையில் இவர்கள் யாரை தான் விட்டு வைக்கவில்லை.

இதில் பெரிய டேமேஜ் மற்றும் ஆடியன்ஸிடம் செம்ம ரெஸ்பான்ஸ் என்றால் கண்டிப்பாக வேதாளம், விவேகம் காட்சிகளுக்கு தான்.

முதல் பாகத்தை பொறுத்தவரை ஏதோ விஜய் படத்தையே கலாய்த்து எடுத்தது போல் இருக்கும், ஆனால், இதில் கொஞ்சம் விஜய் தப்பித்தார் என்றே சொல்ல வேண்டும்.

சிவா நடனமாடும் போது மட்டும் கொஞ்சம் விஜய்யே கலாய்க்கின்றார், கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடு லவ் காட்சிகள், அமெரிக்காவில் கொலையாளியை தேடும் காட்சிகள் மட்டுமே பங்கம்.

ரஜினியின் தற்போதைய ட்ரெண்டிங் டயலாக் தலை சுத்திருச்சு, சிஸ்டம் சரியில்லை என்பதையும் இடையில் சேர்த்து அவரையும் தன் பங்கிற்கு கலாய்த்துள்ளனர், அதிலும் கிளைமேக்ஸ் கபாலி அட்ராசிட்டி. மேலும், சூர்யாவையும் 24 படத்தில் நம்மை வெறுப்பேற்றிய ‘நான் வாட் மெக்கானிக்’ வசனத்தை. வைத்து செய்துள்ளனர்.

அதிலும் பாகுபலி போல் சிவாவை தண்ணீரில் பாட்டி தூக்கி கொண்டு நடக்கும் காட்சி, கிளைமேக்ஸில் கத்தியால் குத்துவாங்கவது என செம்ம கலாய் அந்த காட்சிகள்.

ஆனால், போஸ்டரில் காட்டிய எந்த ஒரு கிண்டலும் படத்தில் இல்லை, அதனால், அதை நம்பி வராதீர்கள்.