Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த்துடன் இணைந்த பிரபல மலையாள நடிகர்

ரஜினி தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், கலையரசன், மேகா ஆகாஷ், யோகி பாபு என ஒரு பட்டாளமே களமிறங்குகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைப்பெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் அதே லொக்கேஷனில் தான் நடைபெறுகிறது என்றாலும் ரஜினி சென்னை திரும்பி விட்டார். ஏனெனில் அந்த படப்பிடிப்பு வருகிற 20ம் தேதி தான் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு நண்பனாக கலையரசன் நடிக்கிறார். இதேபோன்று ரஜினிக்கு நண்பனாக மலையாள நடிகரான பகத் பாசில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் வில்லன் விஜய் சேதுபதிக்கும், பகத் பாசிலுக்கும் இடையிலான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

மேலும் பகத் பாசில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.