Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் நாளிலேயே அதிரடி வசூல் செய்த தமிழ்ப்படம் 2- சிவா கலக்குராறே

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா இயக்கத்தில் நேற்று வெளியானது தமிழ்ப்படம் 2.

தமிழ் படங்கள் மட்டுமில்லாது பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களை கலாய்த்து வந்த இப்படத்தின் டீஸர், பாடல்கள் என அனைத்துமே இளைஞர்களிடம் செம வரவேற்பை பெற்றது.

படு எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 63 லட்சம் வசூல் செய்துள்ளதாம். இப்படம் மதுரையில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் விமர்சனங்கள் நன்றாக வந்துள்ள நிலையில் வரும் நாட்களில் வசூல் மாஸ் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.