Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் படம்-3யின் கதை இப்படித்தான் இருக்கும், ஸ்பெஷல் தகவல்

தமிழ் படம் எங்கு திரும்பினாலும் சினிமா ரசிகர்களிடம் இதுப்பற்றி தான் பேச்சு. ஏனெனில் அந்த அளவிற்கு இப்படத்தின் தாக்கம் உள்ளது.

இந்நிலையில் தமிழ் படம் இரண்டு பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற, தற்போது மூன்றாவது பாகம் வருமா? என்பது தான் பலரின் கேள்வியும்.

படத்தின் கிளைமேக்ஸ் பார்க்கும் போது கண்டிப்பாக தமிழ் படம்-3 வரும், ஏனெனில் பாகுபலி முதல் பாகம் ஸ்டைலில் இப்படத்தை முடித்துள்ளனர்.

அதனால் மூன்றாவது பாகத்தில் சிவாவின் மகன் வருவது போலவும், தன் அப்பாவிற்கு நடந்த துரோகத்திற்கு பழிவாங்குவது போலவும் காட்சிகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சிவாவிற்கு தான் திருமணமே ஆகவில்லை, பிறகு எப்படி மகன் என்று லாஜிக் கேள்வி கேட்க கூடாது, ஏனென்றால் இது தமிழ் படம். இது நடக்குமா? என்று தெரியவில்லை, நடந்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்களின் ஆவல்.