Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-62வில் இவரா, ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நடக்குமா?

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் செம்ம ஹிட் அடித்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகின்றது, இந்நிலையில் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கலாம் என்று நாம் முன்பே கூறியிருந்தோம்.

தற்போது நெருங்கிய வட்டாரங்கள் பெரும்பாலும் யுவன் தான் இசையமைப்பாளர் என்பது போல் கூறி வருகின்றனர், அப்படி இது நடந்தால் விஜய்-யுவன் கூட்டணியில் இது இரண்டாவது படமாகும்.

மேலும், ரசிகர்களும் எப்போது மீண்டும் இந்த கூட்டணி இணையும் என வெறித்தனமாக காத்திருக்கின்றனர், அதிகாரப்பூர்வ தகவல் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments