Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரும் என்னை கொலை செய்திருக்கிறார்கள்! பிக்பாஸ் பரணி ஓபன் டாக்

ஓவியாவிற்கு பிறகு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றவர் பிக்பாஸ் பரணி. பின் சில சூழ்நிலைகளால் அவ்வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் மற்றவர்கள் அவரின் மீது சில குற்றச்சாட்டை வைத்தனர்.

பின் அது உண்மை இல்லை என நிரூபணம் ஆனது. பல கேள்விகள் எழும்பியது. ஆனாலும் அவருக்கு ஆதரவு பெருகியது. பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் மீது குற்றங்கள் சுமத்தினாலும் அவர்கள் அனைவர் மீதும் மரியாதை வைத்திருக்கிறேன்.

கஞ்சா கருப்பு அண்ணணுக்கும் எனக்கும் அப்போதே சில சலசலப்புகள் படங்களில் இருக்கும். ஆனால் பெரிதளவில் ஏதும் இல்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு நானாக வரவில்லை. என்னை எதும் செய்யவிடாமல் தடுத்தார்கள்.

அதனால் தான் வெளியே வந்தேன் என கூறினார். ஒருவரை பற்றி முழுமையாக தெரியாமல் குறை சொல்வது கொலை செய்வதற்கு சமம். என்னை இப்படித்தான் பலர் கொலை செய்திருக்கிறார்கள்.

அதற்காக நானும் கொலை செய்யவேண்டுமா என்ன? என்னை வளரவிட்டிருந்தால் ஒரு மேம்பட்ட நடிகராக, தேசிய விருது பெற்றவனாக ஆகியிருப்பேன். பின் அனைவரை பற்றியும் ஒரே வரியில் அவர் சொன்னார்.

ஓவியா பற்றி பேசும் போது சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரி, சினேகன் - ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள, காயத்திரி - ரொம்ப ஓவரா ஆட்டம் போடுற, ஜூலி - இன்னொரு வீட்டுக்கு போன தங்கச்சி, ரைசா - செயற்கை என்றும் ஒரிஜினல் ஆகிவிடாது.

ஆரவ் - கூட்டத்தை பார்த்து ஒத்து ஊதுதல் என்றும் நிலைத்தில்லை. உண்மை ஜெயிக்கும். வையாபுரி - அனுபவம் வாய்ந்த சிஞ்சா. சக்தி - தொட்டிக்குள் வளர்க்கப்படும் செடி. கணேஷ் வைபிரேட் முட்டை. நமீதா - கிளீன் டாய்லெட்டில் மட்டுமல்ல. மனதிலும் இருக்க வேண்டும்.

ஆர்த்தி - மாமியா உடைச்சா மண் சட்டி, மருமகள் உடைச்சா பொன் சட்டி, பரணி - எல்லா வீட்டிலும் ஒருத்தன் இருப்பான், கஞ்சா கருப்பு - எல்லா தெருவில் இப்படி ஒருவர் இருப்பர் என சுருக்கமாக கூறினார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments