Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய் சார்.. ம்ம் சான்ஸே இல்ல! பிரபல டேன்சர் விக்னேஷ்

அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பலரின் பக்கத்தில் நின்றாடியவர் டேன்சர் விக்னேஷ். சினிமாவில் சாதிக்க வேண்டும் என வந்தவர்களில் ஒருவர்.

படிப்பை விட்டுவிட்டு பல படங்களில் டேன்சராக பணியாற்றி வருகிறார். மலையாளத்தில் படத்தில் தொடங்கி அஜித், விஜய் என பல நடிகர்களின் பாடல்களில் நடனமாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய் சார் தான் டேன்சர்களை விட நன்றாக ஆடுவார். ஒரே டேக் தான். மிஸ்டேக்கே கிடையாது. அவரை விட நாம் நன்றாக ஆடவேண்டும் என்று தோன்றும். அதே போல அஜித் சாருடன் பணியாற்றியிருக்கிறேன்.

அவர் எப்போதும் இயல்பாகவே தான் இருப்பார். வாங்க தம்பி, எப்பிடி இருக்க நல்லா இருக்கியா என கூடப்பிறந்த அண்ணன் போல பழகுவார். அவரின் பிளஸ் அது தான். மனசே உருகிவிடும். உண்மையாக பழகுவார்.

சிவகார்த்திகேயனுடன் VVS ஊதா கலரு ரிப்பன் பாடலில் பலூன் உடைத்தேன் என நேர்காணலில் கூறினார். தற்போது மெர்சல், தானா சேர்ந்த கூட்டம் என இப்போது படங்களில் பணியாற்றியுள்ளார். வாழ்த்துக்கள் விக்னேஷ்..

Comments