Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் சந்திப்பிலேயே கதையே கேட்காமல் இந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்

பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் அஜித். இவர் விரைவில் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார். வீரம், வேதாளம், விவேகம் படத்திற்கு பிறகு இது சிவாவுடன் இணையும் நான்காவது படமாகும்.

விவேகம் படத்துக்கு வந்த கலவையான விமர்சனத்திற்கு பின்பு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முன்னணி இயக்குனர்கள் பலர் ரெடியாக இருக்கும்போது தொடர்ந்து நான்காவது முறை சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

சிவா சமீபத்திய பேட்டியில் கூறுகையில், வீரம் படத்துக்காக தயாரிப்பு தரப்பில் என்னை பரிந்துரைத்தபோது போன்செய்து என்னுடன் பணியாற்ற விருப்பமா என்று அஜித் கேட்டாராம்.

உடனே சிவா அஜித்தை சந்தித்ததும், 1 மணி நேரம் சினிமா பற்றிய தன்னுடைய பார்வையை சிவா சொன்னாராம். பேசியபின் நாம் படம் பண்றோம். உங்க வீட்டில் சொல்லிடுங்கனு அஜித் இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம்.

இத்தனைக்கும் சிவா கதையை பற்றி பேசவே இல்லையாம். அதற்கு பிறகு தான் வீரம் கதையே முடிவு செய்தாராம்.

தற்போது வரை எந்த விஷயம் என்னிடம் அஜித் சாருக்கு பிடித்தது என்று தெரியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.