Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் மட்டன் மட்டுமல்ல இதுவும் செமையாக சமைப்பார், விஜய்யிடம் பிடித்தது என்ன? மனம் திறந்த பேபி அனிகா

என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பேபி அனிகா. அஜித்தின் மகளாக நடித்த இவரை அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற தமிழ் ரசிகர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இவர் சமீபத்தில் மா என்ற குறும்படத்தில் கர்ப்பமான பள்ளி செல்லும் சிறுமியாக நடித்து அதிர்ச்சியளித்தார்.

இதனையடுத்து தற்போது அளித்த பேட்டியொன்றில், நான் இன்னும் பேபி இல்லை, வளர்ந்துவிட்டேன். இனி அப்படி கூப்பிடாதீர்கள் என்றார்.

அஜித்துடன் நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. அவர் மிகவும் பண்பானவர், பாசமானவர், அன்பானவர், அமைதியாக பேசுவார். மட்டன் பிரியாணி சமைத்துக்கொடுப்பார், நான் மீன் சாப்பிடமாட்டேன். ஆனால் அவர் சமைத்த கேரள ஸ்டைல் மீனை சாப்பிட்டதும் எனக்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

விஜய்யிடம் பிடித்தது அவரின் நடனம் தான். எளிதாக இருப்பதுபோல் தோன்றும், அதைப்போல முயற்சித்துள்ளேன். ஆனால் மிகவும் கடினமாக இருந்தது என்றார்.

Comments