2012 - Top 10 Celebrities & Movies

2012ம் ஆண்டு தமிழ் திரையுலகில் முதல் 10 இடத்தை பிடித்த பிரபலங்கள்

2012 - முதல் 10 இடத்தை பிடித்த படங்கள்

2012-திரையுலகம், ரசிகர்களுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு விருந்தளித்தது என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட மிக அதிக அளவிலான படங்கள் திரையிடப்பட்டன. அந்த வகையில் இந்த ஆண்டு ரசிகர்களின் மனதை பூர்த்தி செய்த முதல் 10 படங்களின் பட்டியல்.

1. துப்பாக்கி - முதல் இடத்தில்

2012ம் ஆண்டில் வெளியான துப்பாக்கி ரஜினி நடித்த எந்திரனை வசூல் சாதனையில் முறியடித்து முதல் இடத்தில் பெற்றுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ், இளைய தளபதி விஜய், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் துப்பாக்கியின் வெற்றி தயாராப்பாளர்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது. இருப்பினும் படத்தில் காண்பிக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்க அக்காட்சிகள் நீக்கப்பட்டதுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட துப்பாக்கி படக்குழு மன்னிப்புகோரியது.

2. நண்பன் - இரண்டாம் இடத்தில்

இந்தியில் அமீர்கான், மாதவன் நடித்து வெற்றிபெற்ற த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் நண்பன் என்ற பெயரில் வெளியானது.

ஷங்கர் இயக்க விஜய், ஜீவா,ஸ்ரீகாந்த் கூட்டணியில் நண்பனின் வெற்றி ஒரு ரீமேக் வெற்றியே.. இதுவரை வாய்ப்புகள் இல்லாது தவித்து வந்த ஸ்ரீகாந்த், சத்யனுக்கு நண்பன் ஒரு ரீ- என்ட்ரி எனலாம்.

3. ஒரு கல் ஒரு கண்ணாடி - மூன்றாம் இடத்தில்

தமிழ் திரையுலகில் வெற்றி தயாரிப்பாளராக இருந்து வந்த ரெட் ஜெயண்ட் மூவிஸின் அதிபர் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக ஒரு கல் ஒரு கண்ணாடியில் அறிமுகமாகினர்.

இவருடன் சந்தானம் கூட்டணி வைக்க இப்படத்தை ராஜேஷ்.எம் இயக்கினார். சிவா மனசுல சக்தி, பாஸ் படங்களைப்போலவே கொமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படமும் அபார வெற்றி பெற்றது.

4. நான் ஈ - நான்காம் இடத்தில்

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஈகா படத்தை தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளியிட்டனர்.

படத்தில் நானி, சமந்தா, சுதீப் இணைந்து நடித்திருந்தனர். கொலை செய்யப்பட்ட கதாநாயகன் நானி, ஈயாக மாறி வில்லனை கொலை செய்வதே படத்தின் கதை. இப்படத்தின் மூலமாக படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

5. வழக்கு எண் 18/9 - ஜந்தாம் இடத்தில்

இளைய தலைமுறையினரை காமெரா வசதி கொண்ட செல்போன் எந்த அளவுக்குச் சீரழிக்கிறது என்பதை உணர்த்துகிறது இப்படம்.

செல்வந்தர்கள் குற்றம் புரியும் போது சட்டம் தன் கடமையைச் செய்ய மறுப்பதால் வறியவர்கள் சட்டத்தைத் தன் கையில் எடுப்பதை நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

6. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - ஆறாம் இடத்தில்

விஜய் சேதுபதிக்கு பொருத்தமான படமாக இது அமைந்தது. படத்தின் இயக்குனர் பாலாஜி, தன் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவத்தை படமாக எடுத்தார்.
படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் சினிமா துறையில் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

7. காதலில் சொதப்புவது எப்படி? - ஏழாம் இடத்தில்

சித்தார்த், அமலா பால் இணைந்து நடித்த முதல் தமிழ் படமாகும்.

காதலர்களுக்கு இடையே இருக்கும் ஈகோ- சண்டை, பிரிவு, பின் இணைதல் இது தான் கதை. கூடவே நண்பர்களின் காதல் மட்டுமல்லாது அவர்கள் பெற்றோர் காதல் வரை அலசி காதலின் அற்புதத்தை மிக அழகாக விளக்கியுள்ளார் இயக்குநர்.

8. கும்கி - எட்டாம் இடத்தில்

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி, வருடத்தின் கடைசியில் வெளியானாலும் பெரிய ஹிட் அடித்தது.

இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, அறிமுகமாகியுள்ளார். இருப்பினும் இப்படத்தில் நாயகனை விட படத்தில் நடித்த யானையை அதிகளவில் பேசப்பட்டது.

9. பீட்சா - ஒன்பதாம் இடத்தில்

விஜய் சேதுபதி இந்த வருடத்தின் புதுமுக நடிகர்களில் விவாதிக்க வேண்டிய ஒரு நபர்.

நடிப்பை வெளிப்படுத்தாவிட்டாலும் கதை மற்றும் கதாப்பாத்திரத்தை தெரிவு செய்து நடிப்பதால் அவருக்கு பீட்சா வெற்றியை கொடுத்தது. படத்தில் கோபி அமர்நாத் என்பவரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணன் என்பவரின் இசையும் தூள்.

10. நீ தானே என் பொன் வசந்தம் - பத்தாம் இடத்தில்

கௌதமின் வழக்கமான காதல் பாணியில் இப்படம் அமைந்தாலும் ரசிகர்கள் சமந்தாவிற்கென்றே சென்றனர். இளைய ராஜாவின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு வலுசேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

hits