Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாதியற்று டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு குரல் கொடுத்த முதல் நடிகர்

நாம் ஒவ்வொருவரும் உயிர் வாழ தேவையான உணவுகளை கொடுக்கும் விவசாயிகள் கடன் தொல்லையால் உயிரிழந்து வருகின்றனர்

பருவமழை பொய்த்து போனதாலும், காவிரியிலிருந்து போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததாலும் பயிர்கள் வாடியது. இதனால் வருமானம் போனதோடு வங்கியில் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் இதுவரை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இதற்கு அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 6 நாட்களாக வீதிகளில் அரைநிர்வாணமாக இறந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு போராடி வருகின்றனர்.

ஆனால் இன்னும் அரசாங்கம் செவிமடுக்கவில்லை. மற்ற பிரபலங்களும் கவனம் செலுத்தாத நிலையில் தொடர்ந்து விவசாயப்பிரச்சனைகளை தனது பக்கத்தில் ஷேர் செய்து வரும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் விவசாயிகளின் போராட்டத்தை பற்றி தன் டிவிட்டர் பக்கத்தில் பேசியுள்ளார்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரை விமர்சனம்
Comments