Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss தெலுங்கு நிகழ்ச்சியில் இந்த இரண்டு நாயகிகள் கலந்து கொள்கிறார்களா?

பாலிவுட்டில் 10 சீசனுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு வெற்றி பெற்ற நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதே நிகழ்ச்சியில் தெலுங்கிலும் வரும் 16ம் தேதி ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க ஆரம்பமாக இருக்கிறது. இதுநாள் வரை இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் வரவில்லை.

ஆனால் நடிகைகள் சினேகா மற்றும் ரம்பா கலந்து கொள்ள போகிறார்கள் என்ற செய்திகள் மட்டும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. ஆனால் இவர்கள் BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.