Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விதியை மீறி தவறாக பேசும் ரைசா- பாதிக்கப்படும் மற்ற போட்டியாளர்கள்

BiggBoss நிகழ்ச்சி குறித்த பரபரப்பு இப்போதும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து விதியை மீறி நடப்பவர் ரைசா. இரவு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தூங்க கூடாது என்பதை அறிந்தும் நிறைய நாட்கள் ரைசா தூங்கியிருக்கிறார்.

இதனால் பல முறை BiggBoss அவரை கண்டித்துள்ளார். தொடர்ந்து ரைசா இப்படியே செய்து வருவதால் அண்மையில் வந்த புதிய புரொமோவில் BiggBoss அதிரடி முடிவு எடுத்துள்ளார்.அதோடு புது நபர் ஒருவர் முகமூடி அணிந்து வந்து வீட்டில் இருந்து முட்டைகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அவர் எதற்காக அப்படி செய்தார் என்பது தெரியவில்லை.

இறுதியில், ரைசா தன்னை மாற்றிக்கொள்ள முடிவு எடுப்பாரா, முட்டை போட்டியாளர்களுக்கு கிடைத்ததா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.