Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நந்தினியால் சிக்கலில் மாட்டிய பிரபல இயக்குனர்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தற்போது மக்களிடம் மிகவும் பிரபலம். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நந்தினி சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பில் உள்ளது.

இந்த சீரியலை இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து வருகின்றார். இந்நிலையில் இதற்கு கதை எழுதி வந்தவர் வேல் முருகன் என்பவர்.

அவருக்கு சரியாக பணம் தரவில்லை, கேட்டதற்கு சுந்தர்.சி ஆள் வைத்து மிரட்டுகின்றார் என புகார் கொடுத்தார்.

இதை தொடர்ந்து தற்போது இந்த வழக்கை விசாரித்து நீதிபதி ’இந்த புகாரை போலிஸார் விசாரித்து உண்மை இருந்தால் சுந்தர்.சி மீது வழக்குபதிவு செய்யலாம்’ என்று கூறியுள்ளார்.