Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபுதேவாவால் ராஜலட்சுமி-செந்தில் தம்பதிக்கு மட்டுமே அடித்த லக்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பாடகர்கள் உருவாகியுள்ளனர். ஆனால் இந்த சீசனால் தமிழ் மக்களின் அடையாளமான கிராமத்து பாடலுக்கு புதிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளது என்று கூறலாம்.

ராஜலட்சுமி-செந்தில் என்ற தம்பதி கிராமிய பாடல்களை மட்டுமே பாடி அதன் முக்கியத்துவத்தை தமிழ் மக்களுக்கு உணர்த்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா கலந்து கொண்டார்.

அப்போது தொகுப்பாளர், கிராமிய பாடலுக்கு நீங்கள் நடனம் அமைப்பதை பார்க்க வேண்டும், அது எப்போது நடக்கும் என்று கேட்டார். அதற்கு உடனே பிரபுதேவா, இவர்களின் பாடலுக்கே கூடிய விரைவில் செய்துவிடலாம் என்றார்.

இதனை கேட்ட ராஜலட்சுமி-செந்தில் தம்பதி சந்தோஷப்பட்டனர்.

Comments