Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணமே நடக்காது! பிரபல நடிகரை அழவிட்ட ஆர்யா

நடிகர் ஆர்யா தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த ஷோவில் 16 பெண்கள் பங்கேற்றனர் - அதில் தற்போது 3 பெண்கள் மட்டும் இறுதி சுற்றில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆர்யாவின் சங்கீத் நடந்தது. அதில் நடிகர் பிரேம்ஜியும் பங்கேற்றார். 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத அவர் அடுத்த சீசனில் கலந்துகொள்ளவேண்டும் என ஆர்யா கூறினார். அதன் பிறகு ரொமான்ஸ் செய்வது போல நடித்து காட்டு என ஆர்யா கூற பிரேம்ஜியும் அப்படி நடித்துகாட்டினார்.

அதை பார்த்துவிட்டு ஆர்யா "உனக்கு இந்த ஜென்மத்தில் திருமணம் நடக்காது. அடுத்த முறை வேண்டுமானால் பார்க்கலாம்" என காமெடியாக கூறினார்.

அதன்பிறகு நிகழ்ச்சிக்கு சினேகா-பிரசன்னா தம்பதி வந்தனர். அவர்கள் காதல், திருமண வாழ்க்கை, விட்டுகொடுப்பது என பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர்.

அதை பார்த்த பிரேம்ஜி "அவங்க என்ன பேசுறாங்கனு எனக்கு புரியல. ஆனால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் நண்பன் ஆர்யா சந்தோசமாக இருந்தால் அதுவே போதும்" என உருக்கமாக கூறியுள்ளார்.

Comments