Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்க வீட்டு மாப்பிள்ளை குழுவினருக்கு இலங்கை ராணுவம் கொடுத்த கெடுபிடி- அதிர்ச்சி தகவல் கூறும் நிகழ்ச்சி இயக்குனர்

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இலங்கை பெண் சுசானா கலந்து கொண்டது நமக்கு தெரிந்த விஷயம். அவரின் சொந்த ஊரான இலங்கைக்கு ஆர்யா, சுசானா மற்றும் நிகழ்ச்சி குழுவினர் சென்றிருந்தனர்.

அங்கு செல்ல என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தார்கள் என்ற விவரத்தை நிகழ்ச்சியில் இயக்குனர் பிரகாஷ் கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், இலங்கையில் சூட்டிங் அனுமதி வாங்குவது பெரிய கஷ்டமாக இருந்தது. நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என்பதாலேயே ஏகப்பட்ட கெடுபிடி.

குறிப்பா தமிழீழம், பிரபாகரன், முள்ளி வாய்க்கால், LTTE போன்ற வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது என்று தான் அனுமதி கொடுத்தார்கள். அப்படியும் எங்களது படப்பிடிப்பு மக்களுக்கு இடையில் சிங்கள ராணுவ ஆட்களும் இருந்தார்கள்.

இலங்கையில் இருந்த தமிழ் மக்கள் கேமராவை தாண்டி நிறைய கூறினார்கள். அதையும் நாங்கள் எடுத்திருக்கோம், ஆனால் அதை ஒளிபரப்பினால் அவர்களுக்கு பிரச்சனை என்பதால் அதை செய்யவில்லை என்று கூறியுள்ளார் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இயக்குனர்.