Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலையணைப் பூக்கள் ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்- படு கொண்டாட்டத்தில் சாண்ரா

சீரியல்கள் அன்றாடம் வீட்டில் இருக்கும் மக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பது நாமே நன்றாக அறிந்திருப்போம். ஒருநாள் கூட பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலைமையில் இருக்கும் மக்களும் உள்ளனர்.

அப்படி சீரியலில் தீவிரமாக இருக்கும் பலருக்காகவே தொலைக்காட்சிகளில் வித்தியாசமான சீரியல்கள் வந்துவிட்டன. அதில் மக்களின் அதிக வரவேற்பை பெற்றுவரும் சீரியல் தலையணைப் பூக்கள். இந்த சீரியல் தொடங்கி 500வது எபிசோடை எட்டியுள்ளதாம்.

இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக சீரியல் நாயகி சாண்ரா தன்னுடைய சமூக வலைதளத்தில் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.