Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-விஜய்யை வைத்து காமெடி செய்த ஆல்யா மானசா- கோபத்தில் ரசிகர்கள்

சின்னத்திரை நாயகிகளில் இப்போது ரசிகர்களால் அதிகம் பாராட்டப்படுபவர் நடிகை ஆல்யா மானசா. இவர் பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியலை தாண்டி இவர் செய்யும் டப்ஸ்மேஷ் ரசிகர்களிடம் மிகவும் வைரல் என்றே கூறலாம். சமீபத்தில் இவர் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனக்கு சினிமாவில் மிகவும் பிடித்த நடிகர்கள் கௌதம் கார்த்திக், சிம்பு என கூறினார்.

அதோடு தல-தளபதியில் பிடித்தது தனக்கு விஜய் என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசும்போது ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் தல-தளபதியில் உங்களுக்கு பிடித்தது யார் என கேட்டனர், நான் தல பிடிக்கும் என்று கூறினேன், உடனே அவர்கள் அஜித், அஜித் என கத்தினர்.

நிஜமாக எனக்கு தல யார் தளபதி யார் என்று தெரியாது, அப்போது உடனே மாற்றி கூறவும் முடியாது அதனால் அங்கே அப்படியே அமைதியாகிவிட்டேன் என்றார்.