Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மக்கள் இசையை தாண்டி செந்தில் செய்த செயல்- நெகிழ்ந்த அரங்கம்

மக்கள் இசை என்பது கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நகர்ப்புரங்களில் இருப்பவர்களுக்கு மக்கள் இசை என்றால் என்ன என்பதை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர் செந்தில்-ராஜலட்சுமி தம்பதி.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் செந்தில் சங்கமம் படத்தில் இடம்பெற்ற பாடலை பாட அரங்கமே எழுந்து நின்று கைத்தட்டல்கள் கொடுத்துள்ளனர். நிகழ்ச்சியில் மக்கள் இசை கலைஞர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. அதில் ஒருவர் பேசும்போது, நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு செந்தில் அவர்கள் தான் காரணம், என்னுடைய குருநாதரும் அவர்தான்.

என் அப்பா உடல்நிலை சரியில்லாத போது என்னை கல்லூரியில் சேர்த்துவிட்டார். என்னுடைய வளர்ச்சிக்கு அவர்தான் காரணம் என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.