Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொகுப்பாளினி டிடிக்கு கிடைத்த அங்கீகாரம்- வாழ்த்து தெறிவிக்கும் பிரபலங்கள்

தொகுப்பாளினி என்று கூறினாலே முதலில் நமக்கு நியாபகம் வருவது டிடி. இப்போது நிறைய பேர் வந்துவிட்டார்கள், ஆனால் டிடிக்கு ரசிகர்களிடம் இருக்கும் மவுசு குறையவே இல்லை.

நடுவில் தொலைக்காட்சிகளில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்த டிடி இப்போது பிஸியாகிவிட்டார். விருது விழா, படங்களின் ஆடியோ வெளியீடு போன்றவற்றில் அவர் பிஸியாக கமிட்டாகி வருகிறார்.

இந்த நேரத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று தொலைக்காட்சிகளில் அதிகம் ரசிகர்களால் விரும்பத்தக்க பிரபலம் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். அதில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் டிடி. இந்த தகவல் பிரபலங்களுக்கு தெரியவர அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இவரை தொடர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த பிரபலங்களின் விவரம் இதோ

  • திவ்யதர்ஷினி
  • கீர்த்தி
  • நக்ஷத்ரா
  • ரம்யா
  • வாணி போஜன்
  • சைத்ரா ரெட்டி
  • ஆல்யா மானசா
  • சரண்யா
  • அஞ்சனா
  • நித்யா ராம்