Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராமர் வீட்டு கல்யாணம் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு- அவரே சொல்லும் ஸ்பெஷல் விஷயம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல காமெடி காட்சிகள் கொடுத்தும், பெண் வேடம் போட்டு ரசிகர்களை அசத்தியவர் ராமர்.

இவருடைய உடலமைப்பு, முகபாவனைகள் அனைத்தும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ராமர் வீட்டு கல்யாணம் என்ற தலைப்பில் ஒரு நிகழ்வு நடந்தது. அது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது, பலர் அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள் என்றே கூறலாம்.

ராமர் வீட்டு கல்யாணம் எப்படிபட்ட வரவேற்பை பெற்றது என்று ராமரே கூறியுள்ளார். அதில் அவர், என்னம்மா இப்படி பண்றீங்களேமா நிகழ்ச்சிக்கு பிறகு இது செம ஹிட். இவ்வளவு பெரிய ஹிட் நிகழ்ச்சியாக மாறும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. அதிலும் மனைவி, குழந்தைகள் நடித்தது மனசுக்கு நெருக்கமான ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது.

ரசிகர்கள் நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து கூறுவது பெருமையாக இருக்கிறது என்றார்.

Comments