Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓரே ஒரு விசயத்தால் ஒரே நாளில் ஓஹோவான என்னமா ராமர்! பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தருணம்

என்னம்மா ராமரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மதுரைக்காரரான இவர் தன் காமெடி திறமையால் தமிழகம் முழுக்க ரசிகர்களை பெற்று விட்டார். சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் அவரை தேடி போகிறது.

அண்மையில் ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை, ராமர் வீட்டு கல்யாணம் என்ற பெயரில் விருது விழாவில் அதிகமாவே கலாய்த்து விட்டார்கள். ஏற்கனவே புரமோவும் வெளியாகி செம ரீச்சாகிவிட்டது.

இந்நிலையில் அந்த பகுதியை அண்மையில் டிவியிலும், இணையதளத்தில் வெளியாக பலரும் அதை பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஆர்யா போல பேசி பலரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

அதே வேளையில் அண்மையில் வந்த அன்னையர் தினத்தன்று பல பேர், ராமரின் அந்த புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்து அழகுபார்த்திருக்கிறார்கள்.

இதனால் விசயமறிந்த ராமர் இன்ப அதிர்ச்சியாகியிருக்கிறார். மேலும் ஆத்தாடி என்ன உடம்பீ என கடந்த வருடத்தில் அவர் செய்த காமெடி தற்போது வைரலாகி வருகிறது.

Comments