Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மக்கள் இசை புகழ் செந்தில் ஆசை நிறைவேறிவிட்டது- மா.கா.பா. ஆனந்த் கூறிய விஷயம்

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் செந்தில்-ராஜலட்சுமி என்ற தம்பதி மக்கள் இசையில் பாடி புகழ் பெற்று வருகின்றனர்.

அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் செந்தில் வழக்கம் போல் பாடி அசத்த, அதை கேட்டு அனைவரும் எழுந்துநின்று பாராட்டு எல்லாம் தெரிவித்தனர். அப்போது மாகாபா ஆனந்த் பேசும்போது, இதை நான் கண்டிப்பாக கூற வேண்டும். வெளிநாட்டில் பொதுவாக பாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் வைப்பார்கள்.

ஒருவர் எனக்கு போன் செய்து, இந்த முறை மக்கள் இசை பாடல்கள் பாட விரும்புகிறோம், செந்தில் அவர்களிடம் கேட்டு எங்களுக்கு பாடல் ஏதாவது கொடுக்க முடியுமா என்று கேட்டார்கள். மக்கள் இசை பெரிய அளவில் மக்களிடம் போய் சேர்கிறது என்றார்.

செந்தில் அவர்களின் ஆசையும் இதுவாகதான் இருந்தது. அதாவது அழிந்து வரும் இந்த இசை நம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது தனது ஆசை என ஏற்கெனவே கூறியிருந்தார்.