Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமிக்கு இப்படி ஒரு நீண்ட நாள் ஆசையாம்!

செந்தில் ராஜலெட்சுமி தம்பதியை மறக்க முடியுமா என்ன. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்கள். சமூகவலைதளங்களில் இவர்களுக்கு வரவேற்பு நிறைய இருந்தது.

நாட்டுப்புற பாடல்கள் மேடையில் அள்ளி வீசி அத்தனை ரசிகர்களையும் ஆர்ப்பரிக்க வைத்தார்கள். அண்மையில் இவர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், ரஹ்மான் என பலரும் வாழ்த்தினார்கள்.

இவர்களுக்கு நீண்ட நாளாக பல பிரபலங்களின் பேட்டிகளை பார்த்து ரசித்திருக்கிறார்கள். தங்களையும் நேர்காணல் செய்ய அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம் இருந்ததாம்.

ஆனால் அண்மையில் அந்த நிகழ்வு நடந்தது. இவர்களுக்கும் எதிர்பார்த்ததை விட பல சானல்களில் நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததும் மகிழ்ச்சியாகியிருக்கிறார்கள்.

பேட்டியும் கொடுத்துவிட்டு நீண்ட நாள் ஆசை நிறைவேறியது என கூறியுள்ளார்கள்.