Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விற்பனைக்கு வருகிறது பிக்பாஸ் நிறுவனம் - மொத்த மதிப்பு இத்தனை கோடிகளா? ஷாக் ஆகாதீங்க!

தற்போது இந்தியாவில் அதிகம் பிரபலமான டிவி ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் என எந்த சந்தேகமும் இல்லாமல் கூறலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தயாரிப்பது அமெரிக்க நிறுவனமான Endemol Shine தான். 21st Century Fox மற்றும் Apollo என்ற தனியார் நிறுவனமும் தான் Endemol Shine Group-ன் உரிமையாளர்கள்.

இந்நிலையில் Endemol Shine Group விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக முதற்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

சர்வதேச அளவில் மிகப்பெரிய டிவி ப்ரோடக்ஷன் நிறுவனமான இதன் மொத்த மதிப்பு 4 பில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் Rs. 27,238 கோடி.