இப்படத்தை ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.
இப்படத்தில் உதயநிதி, நயன்தாரா இவர்களுடன் சந்தானம், புரோட்டா சூரி ஆகியோரும் நடிக்கின்றனர்.
பெயரிடப்படாமல் இருந்த இந்தப் படத்திற்கு தற்போது ‘கதிர்வேலின் காதலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
காதல், சென்டிமெண்ட், கொமெடி கலந்து உருவாகும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரத்தில் தொடங்க இருக்கின்றனர்.
சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் பிற நகரங்களில் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர்.
ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.
நயன்தாரா ஏற்கனவே, எஸ்.ஜே சூர்யாவுடன் “கள்வனின் காதலி” என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |