[ Wednesday, 04 July 2012, 05:43.24 AM GMT +05:30 ]
அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்தின் புதிய ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்திற்கான ட்ரைலரை தனியாக விழா வைத்து கொண்டாட படக்குழுவினர் முடிவ செய்திருந்தனர்.
இருப்பினும் சில காரணங்களால் ட்ரைலர் வெளியிட்டு விழா, ரத்தாகி இணையத்தில் ட்ரைலர் வெளியிடப்பட்டது.
நேற்று காலை வரை சுமார் 1,50,000 அதிகமானோர் இணையத்தில் ட்ரைலரை பார்த்து ரசித்திருக்கிறார்கள். படத்தின் புதிய ட்ரைலரின் வசனங்கள் அஜீத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
"என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம், ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேணும்" என்ற வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
பில்லா-2 அஜித்திற்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்துள்ளார். யுவன் இசையத்துள்ளார். சகர் டோலட்டி படத்தை இயக்கியுள்ளார்.