இவர் அடுத்து நாயகனாக நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களும் தொடர்ந்து வெற்றியடைந்தன.
இந்த ஹிட்லிஸ்டில், அவர் வில்லனாக நடித்த சுந்தரபாண்டியன் படமும் அடங்கும்.
அடுத்து, ரம்மி, சூது கவ்வும் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது நடிக்கும் படங்களும் கொமெடி கலந்த திரில்லிங்கான கதைகள் தான்.
ஒரு நாயகன் இமேஜூடன் என்னை உயர்த்திக் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.
இதுவரை நடித்தது போலவே, வித்தியாசமான கதைக்களங்களாகவே தொடர்ந்து தெரிவு செய்து நடித்து கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ற நடிகனாக மட்டுமே சினிமாவில் நிலைத்திருப்பேன் எனவும் கூறியுள்ளார். |