சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வட சென்னை பகுதியில் வாழ்ந்த குத்துச்சண்டை வீரர்களின் கதையை பிரதானப்படுத்தி படம் எடுக்கப்பட்டு வருகிறது.
ஜெயம்ரவி பூலோகம் என்ற குத்துச் சண்டை வீரராக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகரும், குத்துச் சண்டை வீரருமான நேதன் ஜோன்ஸ் நடிக்கிறார். இதற்காக அவர் அடுத்த மாதம் சென்னை வருகிறார்.
நேரு உள் விளையாட்டரங்கில் அமைக்கப்படும் செட்டில் ஜெயம்ரவிக்கும், நேதன் ஜோன்சுக்குமான சண்டைக் காட்சி படமாக்கப்படுகிறது.
கதைப்படி எதிர் கோஷ்டிகளால் குத்துச் சண்டையில் ஜெயம்ரவியை தோற்கடிக்க முடியாது.
அவர்கள் வாடகைக்கு கொண்டு வரும் ஆள்தான் நேதன் ஜோன்ஸ்.
படம் சம்பந்தமான ஆராய்ச்சியில் இருந்தபோது நம்ம ஊர் குத்துசண்டை வீரர் ஒருவருடன் ஒரு வெள்ளைக்காரர் மோதுவது போன்ற புகைப்படம் கிடைத்தது.
அந்த படம் பற்றி விசாரித்தபோது ஜெயிக்க முடியாத அவரை வெளிநாட்டில் இருந்து ஆள் கொண்டு வந்து ஜெயித்ததாக சொன்னார்கள்.
அதை அப்படியே படத்தின் கிளைமாக்சாக மாற்றிவிட்டேன் என்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். |