இவர் தற்போது காதலை தவிர வேறொன்றுமில்லை என்ற படத்தை இயக்குகிறார்.
இவர் கூறுகையில், டியூசன் சென்டரை மையமாக வைத்து இக்கதை அமைந்துள்ளது.
காதலுக்கும், நட்புக்கும் இடையே மெல்லிய கோடு ஒன்று உள்ளது. அந்தவொரு உணர்வுடன் நாயகன் யுவனும், நாயகி சரண்யாவும் பழகுகின்றனர்.
இவர்களின் உறவு என்னவாகிறது என்பது தான் கதை. இப்படத்தில் முக்கிய வேடத்தில் ராகுல், ரோஹித் உட்பட பல மாணவ, மாணவிகள் நடிக்கின்றனர்.
நிறைய படங்களை இயக்கி இருந்தாலும், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றிருக்கிறேன்.
பசங்க சசிகுமார், மெரினா பாண்டிராஜ் இருவரும் இயக்குனர்களாக இருந்து தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்கள். அவர்கள்தான் எனது முன்னோடி என்று தெரிவித்துள்ளார். |