சென்னை வடபழனி ராஜேஸ்வரி திரையரங்க வளாகத்தில் வரும் 5ம் திகதி நிமிர்ந்து நில் படத்தின் தொடக்க விழா நடக்கின்றது.
இந்த தகவலை படத்தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன், இயக்குனர் சமுத்திரக்கனி இருவரும் தெரிவித்துள்ளார்கள்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகும் 'நிமிர்ந்து நில்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
நாயகன், நாயகியாக ஜெயம் ரவி, அமலா பால் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
கொலிவுட்டில் ஜெயம் ரவியுடன் அமலா பால் முதன்முறையாக இப்படத்தின் மூலம் ஜோடி சேர உள்ளார்.
இதற்குமுன்பு வெளியான காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் கலக்கிய அமலா, இதில் தன் வலுவான நடிப்பை வெளிப்படுத்துவார் என கொலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெயம் ரவி, அமீரின் ஆதிபகவானை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நிமிர்ந்து நில் படத்தில் களமிறங்குகின்றார். |