ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன் நடிப்பில் 'முகமூடி' படத்தை மிஸ்கின் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் முகமூடி படத்துக்காக பணியாற்றிய உதவி இயக்குனரை இயக்குனர் மிஸ்கின் வாஞ்சையோடு முத்தமிட்டார்.
இதுகுறித்து அவர், என்னுடைய உதவி இயக்குனர் மட்டும் இல்லையென்றால் முகமூடி இந்த அளவுக்கு வந்திருக்காது. என் உதவி இயக்குனர் புவனேஷ், இந்தப்படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார்.
அமெரிக்காவில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலையை உதறித்தள்ளி விட்டு என்னிடம் உதவியாளராக சேர்ந்துள்ளார்.
படப்பிடிப்புக்கு செல்வதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது, நான் புவனேஷிடம் படத்தில் பணியாற்ற ஸ்டண்ட் மாஸ்டர் வேண்டும் என்றேன்.
நான் கேட்டுக்கொண்டதால் ஹொங்காங் போனார். புரூஸ் லீயின் 'என்டர் த ட்ராகன்' படத்தில் பணியாற்றிய டோனி லங் என்ற ஸ்டண்ட் மாஸ்டரை புவனேஷ் அழைத்து வந்தார்.
இந்த நேரத்தில் புவனேஷை மனதார பாராட்டுகிறேன் என்று கூறிய இயக்குனர் மிஸ்கின், புவனேஷை அருகே அழைத்து கன்னத்தில் அன்போடு முத்தமிட்டார். பதிலுக்கு புவனேஷும் மிஸ்கின் கன்னத்துக்கு முத்தம் கொடுத்துள்ளார். |