இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் 5 பாடல்களும், ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை ரஜினியே பாடியுள்ளார்.
கோச்சடையான் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீடு டோக்கியோவில் என்றால், படத்தின் சிறப்புக் காட்சிகள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் நடக்கவிருக்கிறது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் பிரிமியர் ஷோக்களை நடத்தவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
100 சதவீதம் ஹாலிவுட் ஸ்டைலில் படத்துக்கு புரமோஷனல் வேலைகளைச் செய்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
ரஜினி கலந்து கொண்ட கோச்சடையான் பிரஸ் மீட்டே லண்டனில் நடந்தது குறிப்பிடத்தக்கது. |